
கல்வி மேலாண்மை (Academic Management)
எவ்வளவு பாடத்திட்டம் உண்மையில் நடத்தப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் காட்டும் பாடத்திட்ட மென்பொருள்
பாடத்திட்ட திட்டமிடல், பாடக் கண்காணிப்பு மற்றும் அவுட்கம் மேப்பிங் ஆகியவை பருவதின் இறுதியில் அல்லாமல், நிர்வாகத்திற்கு உடனுக்குடன் (real time) கிடைக்கும்.
கல்வி மற்றும் பாடத்திட்ட மேலாண்மை மென்பொருள், பருவத்தின் தொடக்கத்தில் பாடத்திட்டங்களை திட்டமிட்டு, ஆசிரியர்கள் நடத்தும் ஒவ்வொரு பாடத்தையும் பதிவு செய்யும்போது அதைக் கண்காணிக்கிறது. இதன் மூலம், பாடங்கள் நடத்தப்படாமல் விடுபடுவதை தேர்வுகள் தொடங்கும் போது கண்டறிவதற்குப் பதிலாக, கல்வித் தலைவர்கள் ஆரம்பத்திலேயே அதை நேரலையாக அறிந்துகொள்ள முடிகிறது.
பாடத்திட்டங்கள் மற்றும் லெசன் பிளான்கள் போன்றவை டைம்பேபிள் மற்றும் தேர்வு மாட்யூல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரசு விடுமுறை காரணமாக கால அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டாலும், பாடத்திட்டக் கண்காணிப்பில் அது தானாகவே பிரதிபலிக்கும்.
இதில் அடங்கியுள்ளவை
பாடத்திட்டத் திட்டமிடல் (Syllabus Planning)
முழு பருவத்தின் பாடத்திட்டமும் பிரிக்கப்பட்டு, பருவம் தொடங்கும் போதே டைம்பேபிளுடன் இணைக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தெளிவான பாடத்திட்ட வழிகாட்டி கிடைக்கிறது.
லெசன் பிளான் பதிவு செய்தல்
ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்தை நடத்தி முடித்ததும் லெசன் பிளானில் பதிவு செய்கிறார்கள். இதனால் வெறும் காகித அளவிலான திட்டமாக இல்லாமல், உண்மையான பாடக்கவரேஜ் பதிவு உருவாகிறது.
பாடக்கவரேஜ் அறிக்கைகள் (Coverage Reporting)
எந்தெந்த செக்ஷன்கள் மற்றும் பாடங்கள் சரியான வேகத்தில் செல்கின்றன அல்லது பின்தங்கியுள்ளன என்பதை கல்வித் தலைவர்கள் உடனுக்குடன் பார்க்க முடியும். இதனால் தேர்வு நேரத்தில் பதற்றப்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கலாம்.
அவுட்கம் மேப்பிங் (Outcome Mapping)
பாடத்திட்ட உள்ளடக்கம் வரையறுக்கப்பட்ட கற்றல் முடிவுகளுடன் (learning outcomes) இணைக்கப்படுகிறது. இது NAAC மற்றும் NBA அங்கீகாரத்திற்குத் தேவையான அவுட்கம் அடிப்படையிலான அறிக்கைகளுக்கு நேரடியாகப் பயன்படுகிறது.
அனைத்து செக்ஷன்களிலும் ஒரே சீரான தன்மை
ஒரு பாடத்தைக் கற்பிக்கும் அனைத்து செக்ஷன்களிலும் ஒரே திட்டத்தின் கீழ் கவரேஜ் கண்காணிக்கப்படுகிறது. எனவே, மாணவர்களின் கற்றல் முடிவு அவர்கள் எந்த செக்ஷனில் அல்லது எந்த ஆசிரியரிடம் படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறாது.
ஏற்படும் மாற்றங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
உங்கள் சொந்த தரவில் (Data) இதைப் பாருங்கள்
எங்கள் குழுவுடன் ஒரு பிரத்யேக நேரலை டெமோவை முன்பதிவு செய்யுங்கள்.
